ஒடிசாவில் ஆட்சியை இழக்கிறார் நவீன் பட்நாயக்: பா.ஜ., முன்னிலை
ஒடிசாவில் ஆட்சியை இழக்கிறார் நவீன் பட்நாயக்: பா.ஜ., முன்னிலை
ஒடிசாவில் ஆட்சியை இழக்கிறார் நவீன் பட்நாயக்: பா.ஜ., முன்னிலை
UPDATED : ஜூன் 04, 2024 03:54 PM
ADDED : ஜூன் 04, 2024 10:04 AM

புவனேஸ்வர்: ஒடிசாவில் 175 சட்டசபை தொகுதிகளில் 78 தொகுதியில் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது. ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி 53 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ., தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், நவீன் பட்நாயக் ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி வருகிறது. தொடர்ந்து 5 முறை முதல்வர் ஆக நவீன் பட்நாயக் பதவி வகித்துள்ளார்.
ஒடிசாவில் 147 சட்டசபை தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடந்தது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 147 தொகுதிகளிலும், பா.ஜ., 147 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 145 இடங்களிலும் போட்டியிட்டன. 63.46 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 04) நடந்து வருகிறது. ஒரு கட்சி மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்க 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தற்போது நிலவரப்படி,
பா.ஜ.,- 78 தொகுதிகள்
பிஜூ ஜனதா தளம்- 53 தொகுதிகள்.
காங்கிரஸ்- 14 தொகுதிகள்,
மற்றவை- 2 தொகுதிகள்.
2019ல்...!
கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிஜு ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ., 23 தொகுதிகளை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.