ADDED : ஜூன் 06, 2024 11:53 PM

பட்னவிஸ் தான் காரணம்!
மஹாராஷ்டிராவில் பா.ஜ., தேய்ந்து போக காரணம் பட்னவிஸ். தன் அரசியல் பழிவாங்கும் செயலால் பலரை அவர் பகைத்துக் கொண்டார். மஹாராஷ்டிர அரசியலில் வில்லன் என்றால் அவர் தான்.
சஞ்சய் ராவத்
மூத்த தலைவர்,
சிவசேனா உத்தவ் அணி
உ.பி., மக்களுக்கு பாராட்டுகள்!
உத்தர பிரதேச மக்கள், அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியான செய்தியை ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழங்கி உள்ளனர். மேலும், பொது பிரச்னைகளே முக்கியமானவை என்பதையும் ஆளுங்கட்சிக்கு எடுத்து கூறியுள்ளனர்.
பிரியங்கா
பொதுச்செயலர், காங்கிரஸ்
திரிணமுலை தடுக்க வேண்டும்!
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின், அக்கட்சி தொண்டர்கள் வெறியாட்டம் போட்டனர்; பா.ஜ.,வினரை தாக்கினர். அந்த நிலை தற்போது நிகழாமல் தடுக்க வேண்டும் என கவர்னரிடம் வலியுறுத்தி உள்ளேன்.
சுவேந்து அதிகாரி
மேற்கு வங்க எதிர்க்கட்சி
தலைவர், பா.ஜ.,