ADDED : ஆக 06, 2024 01:21 AM

உணர்வுகளை மதிக்க வேண்டும்!
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ., அரசு தொடர்ந்து பொய் கூறி வருகிறது. அங்கு பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளதாக அரசு கூறினாலும், உண்மை நிலை தலைகீழாக உள்ளது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்.,
வாய் கிழிய பேசுகின்றனர்!
பா.ஜ.,வினரும், அதன் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பசுக்கள் குறித்து வாய் கிழிய பேசுகின்றனர். ஆனால், அவர்களால் பசுக்களுக்கு தேவையான தீவனத்தை கூட வழங்க முடியவில்லை. நோயால் உயிரிழக்கும் பசுக்களை, பா.ஜ.,வால் காப்பாற்ற முடியவில்லை.
சயோனி கோஷ்
லோக்சபா எம்.பி., திரிணமுல் காங்.,
முறையாக செலவு செய்யுங்க!
சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் செலவு செய்வதில்லை. மத்திய அரசு வழங்கிய நிதியை முறையாக செலவு செய்யுங்கள். அதன் பின், மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
நட்டா
மத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ.,