மைசூரு மிருகக்காட்சி சாலை விலங்குகளுக்கு தண்ணீர் தெளிப்பான்
மைசூரு மிருகக்காட்சி சாலை விலங்குகளுக்கு தண்ணீர் தெளிப்பான்
மைசூரு மிருகக்காட்சி சாலை விலங்குகளுக்கு தண்ணீர் தெளிப்பான்
ADDED : மார் 12, 2025 05:53 AM

மைசூரு ; 'விலங்குகள், கோடை வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன' என, மைசூரு மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மைசூரு மிருகக்காட்சி சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கர்நாடகாவில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பத்தால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், குளிர்ச்சியான சூழலை உருவாக்கவும், அனைத்து விலங்குகளின் தங்குமிடங்களில், தண்ணீர் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இரவில் விலங்குகள் துாங்கும் அறைகளில், அவற்றுக்கு வசதியாக மின் விசிறிகள், குளிரூட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இமயமலை கருப்பு கரடிகளுக்கு, அவற்றின் பசியை கட்டுப்படுத்த உதவும் வகையில், பனிக்கட்டிகளால் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.
கொரில்லா, ஒராங்குட்டான்கள், சிம்பன்சிகள் போன்ற அனைத்து வகையான குரங்குகளுக்கும் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை புதிய தேங்காய் நீர், நீர்ச்சத்துள்ள காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்ற பழங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அவைகளுக்கு வழங்கப்படும் உணவில் 'ஓ.ஆர்.எஸ்.,' சேர்க்கப்படுகிறது.
அனைத்து வகையான தாவர உண்ணி விலங்குகளுக்கும், அவை உள்ள இடங்களில் குளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இயற்கையான குளிர்ச்சியான சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு விலங்குகளின் வீடுகளிலும் வெப்ப நிலையை கண்காணிக்க, தெர்மாமீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளன.