காங்., தொண்டர்களுக்கு எனது "சல்யூட்": சொல்கிறார் பிரியங்கா
காங்., தொண்டர்களுக்கு எனது "சல்யூட்": சொல்கிறார் பிரியங்கா
காங்., தொண்டர்களுக்கு எனது "சல்யூட்": சொல்கிறார் பிரியங்கா
ADDED : ஜூன் 06, 2024 11:20 AM

புதுடில்லி: 'உ.பி மாநிலத்தில் அதிக வெற்றிகளுக்காக உழைத்த காங்கிரசின் தொண்டர்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நான் அவர்களை பாராட்டுகிறேன்' என அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரியங்கா எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைய அரசியலில் பழைய லட்சியங்கள் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளை சரி செய்வதே முதன்மையானது. தேர்தல் என்பது மக்களுக்கானது. மக்கள் மட்டுமே போராடுகிறார்கள். மக்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். உத்தர பிரதேச மாநில காங்கிரசின் தொண்டர்கள் அனைவருக்கும் எனது 'சல்யூட்'.
நீங்கள் வெயிலும், மழையிலும் உழைத்ததை நான் பார்த்தேன். கடினமாக உழைத்து அதிக வெற்றியை தேடி தந்துள்ளீர்கள். காங்கிரஸ் தொண்டர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பயப்படவில்லை. நமது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். மக்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.