எம்.பி., பாராட்டு விழாவில் மது விருந்து பா.ஜ., தலைவர் 6 ஆண்டுகள் நீக்கம்
எம்.பி., பாராட்டு விழாவில் மது விருந்து பா.ஜ., தலைவர் 6 ஆண்டுகள் நீக்கம்
எம்.பி., பாராட்டு விழாவில் மது விருந்து பா.ஜ., தலைவர் 6 ஆண்டுகள் நீக்கம்
ADDED : ஜூலை 11, 2024 06:32 AM
நெலமங்களா, : பா.ஜ., - எம்.பி., பாராட்டு விழாவில், தொண்டர்களுக்கு மது வினியோகம் செய்த விவகாரத்தில், தாலுகா பா.ஜ., தலைவர் சவுத்ரியை, ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி, மாநிலத் தலைவர் விஜயேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் பா.ஜ.,வின் சுதாகர் வெற்றி பெற்றார். அவருக்கு சிக்கபல்லாபூர் மாவட்ட பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள், பெங்களூரு நெலமங்களாவில் ஜூலை 7ல் பாராட்டு விழா நடத்தினர்.
விழா முடிந்ததும், தொண்டர்களுக்கு அசைவ உணவு, மது வழங்கப்பட்டது. இந்த காட்சி, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
பா.ஜ., - எம்.பி., சுதாகரும், 'மது வினியோகித்தது குறித்து எனக்கு தெரியாது. இனி அது போன்று நடக்காது' என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நெலமங்களா தாலுகா பா.ஜ., தலைவர் ஜெகதீஷ் சவுத்ரியை, மாநில தலைவர் விஜயேந்திரா, ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி, உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெகதீஷ் சவுத்ரி கூறுகையில், ''இச்சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்கிறேன். மாநில தலைவரின் முடிவை வரவேற்கிறேன்,'' என்றார்.
அதேவேளையில், கட்சித் தலைவர்கள், தனக்கு ஆதரவாக நிற்கவில்லையென, தனது ஆதரவாளர்களிடம் கூறி, அவர் வருந்தியதாக தகவல்கள் கூறுகின்றன.