மோடி முதலில் பின்னடைவு பின்னர் அபார வெற்றி
மோடி முதலில் பின்னடைவு பின்னர் அபார வெற்றி
மோடி முதலில் பின்னடைவு பின்னர் அபார வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 01:13 AM
வாரணாசி:உத்தர பிரதேசத்தில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் பின்னடைவை சந்தித்தாலும் இறுதியில் 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி லோக்சபா தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களம் கண்டார். கடந்த 1ம் தேதி இங்கு தேர்தல் நடந்த நிலையில், அதில் பதிவான ஓட்டுகள் நேற்று காலை எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் துவக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி பின்தங்கி இருந்தார். காங்கிரசின் அஜய் ராய் முன்னிலையில் இருந்தார்.
அடுத்தடுத்த சுற்றுகளில் பிரதமர் மோடி, அஜய் ராயை விட கூடுதல் ஓட்டுகள் பெற்று முன்னிலைப் பெற்றார். முடிவில், மோடி 6.13 லட்சம் ஓட்டுகள் பெற்றார். அஜய் ராய்க்கு 4.60 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. இருவருக்கும் இடையிலான ஓட்டு வித்தியாசம் 1.52 லட்சம். இதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த லோக்சபா தேர்தலில் 4.79 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.