அலுவலக பணிகளில் ஆர்வமற்ற அமைச்சர்கள்
அலுவலக பணிகளில் ஆர்வமற்ற அமைச்சர்கள்
அலுவலக பணிகளில் ஆர்வமற்ற அமைச்சர்கள்
ADDED : ஜூலை 05, 2024 06:10 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகியும், கர்நாடக அமைச்சர்கள் சிலர் தங்களது அலுவலக பணிகளை இன்னும் துவங்கவில்லை.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
தற்போது அமைச்சர்களாக இருப்போர், கோரிக்கைகளை செவி சாய்த்து கேட்பதில்லை என, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அவ்வப்போது புலம்பி வருகின்றனர். இந்நிலையில் லோக்சபா தேர்தலை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், அமைச்சர்கள் தங்களது அலுவலகத்திற்கு செல்லவில்லை.
லோக்சபா தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், இன்னும் சில அமைச்சர்கள் அலுவலக பணிகளை துவங்காமல் உள்ளனர். உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், தொழில் அமைச்சர் எம்.பி., பாட்டீல், சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் தான், தங்கள் பணிகளை துவங்கி உள்ளனர்.
ஆனால் டி.சுதாகர், எம்.சி., சுதாகர், மங்கள் வைத்யா, சிவராஜ் தங்கடகி உள்ளிட்ட அமைச்சர்கள் இன்னும் தங்கள் பணியை துவங்கவில்லை. அமைச்சர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறைகள் மீது, சரியான ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லப்படுகிறது.