-முதல்வரை கொல்வதாக மிரட்டியவர் சிக்கினார்
-முதல்வரை கொல்வதாக மிரட்டியவர் சிக்கினார்
-முதல்வரை கொல்வதாக மிரட்டியவர் சிக்கினார்
ADDED : ஜூன் 07, 2025 09:38 PM

புதுடில்லி:டில்லி முதல்வரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வாலிபர் காஜியாபாதில் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் பஞ்சவதி காலனியைச் சேர்ந்தவர் ஷ்லோக் திரிபாதி,25. நேற்று முன் தினம் அதிகாலை காஜியாபாத் அவசர உதவி எண்ணுக்குப் போன் செய்து, டில்லி முதல்வர் ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
காஜியாபாத் போலீசார், டில்லி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காஜியாபாத் மற்றும் டில்லி மாநகரப் போலீஸ் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, பஞ்சவதி காலனியில் ஷ்லோக் திரிபாதியை நேற்று கைது செய்தனர். டில்லி அழைத்து வரப்பட்ட திரிபாதி, சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து, காஜியாபாத் போலீஸ் உதவி கமிஷனர் ரித்தேஷ் திரிபாதி கூறியதாவது:
கைது செய்யப்பட்டுள்ள ஷ்லோக் திரிபாதி மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் உள்ளன. அடிக்கடி தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். கைது செய்யப்பட்ட போது, ஷ்லோக் திரிபாதி மது போதையில் இருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.