கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்தார் மம்தா
கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்தார் மம்தா
கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்தார் மம்தா
ADDED : ஜூலை 26, 2024 07:30 PM

புதுடில்லி: மேற்குவங்க முதல்வர் மம்தா பனார்ஜி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லி வந்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. நாளை (27.07.2024) பங்கேற்க உள்ள நிலையில் இன்று(26.07.2024) மாலை டில்லி பிளாக்ஸ்டாப் சாலை, சிவில் லைன் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், மற்றும் கெஜ்ரிவாலின் தாய், தந்தையரை நேரில் சந்தித்து பேசினார்.