ADDED : ஜூலை 13, 2024 01:12 AM

மும்பை: மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிகழ்வில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
அதன்பின், 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குபின் செய்தியாளர்களிடம் மம்தா கூறுகையில், “பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையானது அல்ல; இந்த ஆட்சி தொடர்ந்து நீடிப்பது கடினம்.
எனவே, இந்த அரசு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்ய வாய்ப்பு இல்லை,” என்றார்.
இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத் பவாரையும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.