Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பத்திரிகை வினியோகஸ்தர்கள் 4வது மாநாடு 'லோகோ' அறிமுகம்

பத்திரிகை வினியோகஸ்தர்கள் 4வது மாநாடு 'லோகோ' அறிமுகம்

பத்திரிகை வினியோகஸ்தர்கள் 4வது மாநாடு 'லோகோ' அறிமுகம்

பத்திரிகை வினியோகஸ்தர்கள் 4வது மாநாடு 'லோகோ' அறிமுகம்

ADDED : ஜூலை 21, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: கர்நாடக பத்திரிகை வினியோகஸ்தர்களின் 4வது மாநாடுக்கான லோகோவை, முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.

சித்ரதுர்காவில் செப்டம்பர் 8ம் தேதி கர்நாடக பத்திரிகை வினியோகஸ்தர்களின் நான்காவது மாநாடு நடக்கிறது.

மாநாட்டுக்கான லோகோவை, பெங்களூரு விதான் சவுதாவில், முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த வேளையில், முதல்வரின் ஊடக ஆலோசகர் பிரபாகர், கர்நாடக பத்திரிகையாளர் சங்க தலைவர் சிவானந்த தகடூர், கர்நாடக பத்திரிகை வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சம்புலிங்கா;

மாநில அமைப்பு செயலர் நாதுார் வாசுதேவா, துமகூரு மாவட்ட தலைவர் செலுவராஜு, இயக்குனர் யோகீஸ், சித்ரதுர்கா சங்க தலைவர் திப்பேசாமி, துணை தலைவர் குபேந்திரப்பா மோகன்குமார், செயலர் பிரசாந்த், இயக்குனர்கள் பீமசமுத்ரா வேதமூர்த்தி, மஞ்சுநாத் நாயுடு, பாலய்யா, சுனில் கவாடிகரஹட்டி உடன் இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us