லாரி --- கார் மோதல் 2 மாணவர்கள் பலி
லாரி --- கார் மோதல் 2 மாணவர்கள் பலி
லாரி --- கார் மோதல் 2 மாணவர்கள் பலி
ADDED : ஜூன் 16, 2024 07:18 AM
ராம் நகர்: லாரி -- கார் மோதிய விபத்தில், பெங்களூரு இன்ஜினியரிங் மாணவர்கள் இருவர் பலியாகினர்.
ராம்நகர் மாவட்டம், பிடதி அருகே கப்ப நாயக்கன தொட்டி கிராம பகுதியில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது, கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. இது பற்றி அறிந்த ராம்நகர் போக்குவரத்து போலீசார் அங்கு சென்றனர். காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். இடிபாடுகளில் சிக்கி, காருக்குள் இருந்த, இரண்டு பேர் இறந்தது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள் பெங்களூரு வித்யரண்யபுராவின் விஸ்வா, 21, சூர்யா, 21 என்று தெரிந்தது. நண்பர்களான இருவரும் தனியார் கல்லூரியில், இன்ஜினியரிங் படித்து வந்தனர்.
மைசூரு சென்றுவிட்டு காரில் பெங்களூரு திரும்பியபோது, விபத்து நேர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.