Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தர்ஷன் மகன் போன்றவர்: ஹம்சலேகா உருக்கம்

தர்ஷன் மகன் போன்றவர்: ஹம்சலேகா உருக்கம்

தர்ஷன் மகன் போன்றவர்: ஹம்சலேகா உருக்கம்

தர்ஷன் மகன் போன்றவர்: ஹம்சலேகா உருக்கம்

ADDED : ஜூன் 30, 2024 11:48 PM


Google News
மாண்டியா: ''எங்களுடையது சந்தன வனம். ஒரு மரம் உலர்ந்தால் எதுவும் ஆகாது,'' என பிரபல இசை அமைப்பாளர் ஹம்சலேகா தெரிவித்தார்.

மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி: மிகவும் உயர்ந்த இடத்துக்கு ஏறியவர், மீண்டும் கீழே விழ வேண்டாம். எங்களுடையது சந்தன வனம். ஒரு மரம் உலர்ந்தால்தான் என்ன. மழை பெய்தால் காடு வளரும். சினிமா கலைஞர்கள் ஆலோசிக்க வேண்டும். கோபத்தை விட்டு விட வேண்டும். கோபத்தை சினிமாவில் மட்டுமே, காண்பிக்க வேண்டும். நிஜ வாழ்க்கையில் அல்ல. நிஜ வாழ்வில் ஸ்க்ரிப்டை கொண்டு வரக்கூடாது. கதாபாத்திரமாக ஆக கூடாது. இது கலைஞனின் கடமை.

நடிகர் தர்ஷன் என் மகனை போன்றவர். குழந்தை தவறு செய்தால், தந்தை எவ்வளவு வலியை அனுபவிப்பானோ, அதே வலியை இப்போது நானும் அனுபவிக்கிறேன். குழந்தையும் அதே அளவு வலியை அனுபவித்திருக்கும்.

இவ்வாறு அவர்கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us