Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வயநாடு நிலச்சரிவால் கர்நாடக அரசுக்கு குமாரசாமி... மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைக்கவும் வலியுறுத்தல்

வயநாடு நிலச்சரிவால் கர்நாடக அரசுக்கு குமாரசாமி... மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைக்கவும் வலியுறுத்தல்

வயநாடு நிலச்சரிவால் கர்நாடக அரசுக்கு குமாரசாமி... மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைக்கவும் வலியுறுத்தல்

வயநாடு நிலச்சரிவால் கர்நாடக அரசுக்கு குமாரசாமி... மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைக்கவும் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 31, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : 'கேரளாவின் வயநாட்டில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவிலும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். கலெக்டர்கள், மீட்பு குழுவினர், 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, மாநில அரசை வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடகாவை ஒட்டி உள்ள கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு, 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். பலர் காணாமல் போயுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவை கடந்தால், வயநாடு சென்று விடலாம். பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியே வயநாடு அமைந்துள்ளது.

மைசூரில் உள்ள கபினி அணையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் குடகு பகுதியிலும் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கேரளாவில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். அபாய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

24 மணி நேரம்


மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு, தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும். கலெக்டர்கள், மீட்பு குழுவினர், 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வயநாடு பகுதி, நமது குடகு மாவட்டத்தை ஒட்டி உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

பல பகுதிகளில் மிக அதிக கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்பதால், 'ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. குடகு, உத்தர கன்னடா, சிக்கமகளூரு, ஷிவமொகா உட்பட சில மாவட்டங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகின்றன. பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

விவசாயிகள்


இத்தகைய சூழ்நிலையிலாவது அரசு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், நிர்வாகத்தை முடுக்கி விட வேண்டும். விவசாயிகளுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் இயற்கை அபாயத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில், உடனடியாக அனைத்து அமைச்சர்களையும் பாதிப்பு பகுதிகளுக்கு முதல்வர் சித்தராமையா அனுப்ப வேண்டும். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us