செங்குத்தாக கவிழ்ந்த கேரள அரசு பஸ்
செங்குத்தாக கவிழ்ந்த கேரள அரசு பஸ்
செங்குத்தாக கவிழ்ந்த கேரள அரசு பஸ்
ADDED : மார் 14, 2025 01:44 AM

மூணாறு,:கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், அடிமாலி அருகே கேரள அரசு பஸ் தேவியாறு ஆற்றில் கவிழ்ந்தது. பயணிகள் உயிர் தப்பினர்.
தமிழகம் உடுமலைபேட்டையில் இருந்து மூணாறு வழியாக எர்ணாகுளத்திற்கு கேரள அரசு பஸ் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 16 பயணிகள் இருந்தனர். கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே இரும்புபாலம் செராயிபடி பகுதியில் மாலை 6:45 மணிக்கு பஸ் சென்ற போது திடிரென கட்டுப்பாட்டை இழந்து தேவியாறு ஆற்றில் செங்குத்தாக கவிழ்ந்து. அதில் டிரைவர் உட்பட ஒரு சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் அனைவரும் உயிர் தப்பினர். அப்பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கும் நிலையில், மழை பெய்ததால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக தெரிய வந்தது.