துவாரகா பூங்கா சுவரில் காஷ்மீர் விடுதலை கோஷம்
துவாரகா பூங்கா சுவரில் காஷ்மீர் விடுதலை கோஷம்
துவாரகா பூங்கா சுவரில் காஷ்மீர் விடுதலை கோஷம்
ADDED : ஜூன் 12, 2024 02:32 AM
துவாரகா:துவாரகா வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் சுவரில் சர்ச்சைக்குரிய வகையில், 'சுதந்திர காஷ்மீர்' வாசகம் எழுதப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
துவாரகா செக்டார் 13ல் டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் சுற்றுச்சுவரில் திங்கள் கிழமை மாலை 'சுதந்திர காஷ்மீர்' என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூங்காவின் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், பூங்கா சுவரில் காஷ்மீர் விடுதலை கோஷத்தை எழுதிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.