கருணாநிதி பிறந்த நாள் விழா கோஷ்டிகள் தனி ஆவர்த்தனம்
கருணாநிதி பிறந்த நாள் விழா கோஷ்டிகள் தனி ஆவர்த்தனம்
கருணாநிதி பிறந்த நாள் விழா கோஷ்டிகள் தனி ஆவர்த்தனம்
ADDED : ஜூன் 04, 2024 04:06 AM

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை, நேற்று கோஷ்டிகள் தனித்தனியாக கொண்டாடினர்.
ஜனநாயக முறைப்படி, தேர்தல் நடத்தி நிர்வாகத்தை நடத்தி வந்த கர்நாடக மாநில தி.மு.க., சமீபகாலமாக பதவியில் இருப்பவர்கள் நீடிப்பதையே தொடர்கதையாக்கி விட்டனர். தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இருப்பவர்களில், 50 வயதை தாண்டியவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
கர்நாடக மாநில தி.மு.க., தலைமை அலுவலகம் ராமசந்திரபுரத்தில் உள்ளது. இது, இக்கட்சியின் சொந்த கட்டடம். கடை வாடகை வருமானம் கிடைக்கிறது. ஆனால், அதில் பொருளாளரை மீறி சில முறைகேடுகள் நடந்ததாகவும், சில மாதங்களாக கணக்கு கேட்டு தகராறுகள் முற்றி, தலைமை வரை எட்டியதாகவும், இதனால் கட்சியில் இரண்டு கோஷ்டிகளாக பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில அமைப்பாளர் ராமசாமி தலைமையில் ஒரு கோஷ்டி; அவைத் தலைவர் பெரியசாமி தலைமையில் இன்னொரு கோஷ்டி செயல்படுகிறது. இவ்வாண்டு மார்ச் 1ல் நடந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவின் போது, மாநில அமைப்பாளர் ராமசாமிக்கு எதிராக கூச்சல், குழப்பம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தி.மு.க.,வில் பெரியசாமி கோஷ்டியில் பலர் ஒன்றுகூடியுள்ளனர்.
நேற்று தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழாவை, ராமசந்திரபுரத்தில் உள்ள தி.மு.க., தலைமை கழகத்தில் இரு கோஷ்டிகள் தனித் தனியாக கொண்டாடின.
பெரியசாமி தலைமையில் பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணை அமைப்பாளர் ராமலிங்கம், இளைஞரணி அமைப்பாளர் சிவமலை, துணை அமைப்பாளர்கள் விக்ரம், லியோ ராஜன், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் நாம்தேவ், வட்டார நிர்வாகி தமிழ்ச் செல்வன் ஆகியோர் காலை 10:40 மணிக்கு அலுவலகத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.
கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி புகழாரம் சூட்டினர். 45 நிமிடங்களில் விழாவை முடித்துக்கொண்டுஅங்கிருந்து கிளம்பினர்.
மாநில அமைப்பாளர் ராமசாமி தலைமையில் 11:00 மணிக்கெல்லாம் மகளிர் அணி செயலர் சற்குண இளமதி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜசேகர், முருகானந்தம், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் சுந்தரேசன், வி.எஸ்.மணி ஆகியோர் வந்திருந்து காத்திருந்தனர். பெரியசாமி கோஷ்டி வெளியேறியதும், 11:30 மணிக்கு அலுவலகத்திற்குள் சென்றனர். இவர்களும் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
பெரியசாமி கோஷ்டியினர் பிறந்த நாள் விழாவை முடித்து கிளம்பும்போது, 'நாங்கள் தான் ஒரிஜினல்' என முழக்கமிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், இந்த இரண்டு அணியிலும் சேராமல் எலஹங்காவில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை இலக்கிய அணி செயலர் போர்முரசு கதிரவன் கொண்டாடினார்.
3.6.2024 / ஜெயசீலன்
4_DMR_0002, 4_DMR_0003, 4_DMR_0004
தி.மு.க., மாநில அமைப்பாளர் ராமசாமி தலைமையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. (அடுத்த படம்) மாநில தி.மு.க., அவைத் தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழா. (கடைசி படம்) இரண்டு அணியில் சேராமல் எலஹங்காவில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை இலக்கிய அணி செயலர் போர் முரசு கதிரவன் கொண்டாடினார்.
---------
- நமது நிருபர் -