கார்கில் வெற்றி தினம் : அஞ்சலி நிகழ்வில் முஷாரப் பெயர் இடம் பெற்றதால் சர்ச்சை
கார்கில் வெற்றி தினம் : அஞ்சலி நிகழ்வில் முஷாரப் பெயர் இடம் பெற்றதால் சர்ச்சை
கார்கில் வெற்றி தினம் : அஞ்சலி நிகழ்வில் முஷாரப் பெயர் இடம் பெற்றதால் சர்ச்சை
ADDED : ஜூலை 28, 2024 02:14 AM

ஆழப்புலா: கார்கில் வெற்றி தின அஞ்சலி நிகழ்வு பெயர் பட்டியலில் மறைந்த பாக்., முன்னாள் அதிபர் முஷாரப் பெயர் இடம் பெற்ற சம்பவம் கேரளாவில் நடந்தது.
கேரள மாநிலம் ஆழப்புலாவில் தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 25ம் ஆண்டு வெற்றி தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல் கடிதத்தில் நம் ராணுவ உயரதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் பெயர் பட்டியலில் பாக்., முன்னாள் சர்வாதிகாரியும், ராணுவ ஜெனரலுமான பர்வேஷ் முஷாரப் பெயர் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்த பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1999-ம் ஆண்டு கார்கில் பகுதியில் பாக்., ராணுவத்தினரை ஊடுருவ உத்தரவிட்டதே அப்போதைய ராணுவ தளபதி முஷாரப்பின் பெயர் இடம் பெற்றிருப்பது வெட்க கேடு என கண்டனம் தெரிவித்தனர். பின்னர் தவறுதலாக முஷாரப் பெயரை சேர்த்துவிட்டதாகவும் தவறை திருத்திக்கொள்வதாக வங்கி ஊழியர் சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.