கம்பாலா ஏற்பாட்டாளர்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க உறுதி
கம்பாலா ஏற்பாட்டாளர்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க உறுதி
கம்பாலா ஏற்பாட்டாளர்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க உறுதி
ADDED : ஜூலை 19, 2024 05:43 AM

பெங்களூரு: ''தட்சிணகன்னடாவின், பிரசித்தி பெற்ற விளையாட்டான கம்பாலா ஏற்பாட்டாளர்களுக்கு, நிறுத்தி வைக்கப்பட்ட நிதியுதவி, இந்த சட்டசபை கூட்டம் முடிவதற்குள் வழங்கப்படும்,'' என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் மேலவையில் தெரிவித்தார்.
மேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., - பிரதாப் சிம்ஹா நாயக்: 2023 - 24ல் கம்பாலா ஏற்பாடு செய்தவர்களுக்கு, அரசு இன்னும் நிதியுதவி வழங்காமல் தாமதம் காண்பிக்கிறது.
அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல்: கம்பாலா ஏற்பாடு செய்ததற்கான செலவு பில்களை, தட்சிணகன்னட மாவட்ட கலெக்டர், நடப்பாண்டு மார்ச் 21ல் அரசிடம் சமர்ப்பித்தார். சில தொழில்நுட்ப காரணங்களால், புத்துாரின் கோட்டேவ்வின் சென்னய்யாவுக்கு 5 லட்சம் ரூபாய், ஜோடி சென்னய்யாவுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
பிரதாப் சிம்ஹா நாயக்: இதற்கு முன் சதானந்த கவுடா முதல்வராக இருந்த போது, கம்பாலா ஏற்பாடு செய்த 20 பேருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வழங்கினார். அதன்பின் யோகேஸ்வர் சுற்றுலா துறை அமைச்சரான போது, தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். இப்போது பாரபட்சம் பார்ப்பது ஏன்.
ஹெச்.கே.பாட்டீல்: நடப்பாண்டு ஐந்து இடங்களில் ஏற்பாடு செய்கிறோம். ஏற்பாட்டாளர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுப்போம். கூடுதல் நிதியுதவி வழங்குவது குறித்து, முதல்வருடன் ஆலோசனை நடத்துவேன். இதில் அரசியல் செய்வது என்ற கேள்விக்கே இடம் இல்லை.
தட்சிணகன்னடாவின் பிரசித்தி பெற்ற விளையாட்டான கம்பாலா ஏற்பாட்டாளர்களுக்கு, நிறுத்தி வைக்கப்பட்ட நிதியுதவி, இந்த சட்டசபை கூட்டம் முடிவதற்குள் வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.