ரேணுகாசாமி குடும்பத்தினருக்கு நியாயம் : இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் விருப்பம்
ரேணுகாசாமி குடும்பத்தினருக்கு நியாயம் : இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் விருப்பம்
ரேணுகாசாமி குடும்பத்தினருக்கு நியாயம் : இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் விருப்பம்
ADDED : ஜூன் 13, 2024 05:36 PM

ஷிவமொகா:
''சினிமா ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்,'' என, திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமி குடும்பத்தினருக்கு, நியாயம் கிடைக்க வேண்டும். நடந்த சம்பவத்தால் பாதிப்படைந்த தர்ஷனின் மனைவி விஜயலட்சுமிக்கும், மகனுக்கும் கடவுள் தைரியத்தை கொடுக்க வேண்டும்.
நான் தர்ஷனுக்கு பதிலடி கொடுக்கவில்லை. பத்திரிகையாளராக சில விஷயங்களில் குரல் எழுப்புகிறேன். இது தவிர எங்களுக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை.
ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பாக, நடிகர் தர்ஷன் மீது வழக்கு பதிவாகியுள்ளது. அவரை கைது செய்துள்ளனர். விசாரணை நடக்கும் நிலையில், அது பற்றி பேசுவது சரியல்ல. இப்போது எதையும் கூற நான் விரும்பவில்லை.
சோஷியல் மீடியா மிகவும் அற்புதமான ஊடகம். ஆனால் சமீப நாட்களாக, இது தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இளம் தலைமுறையினரை பாழாக்குகிறது. இதை கட்டுப்படுத்த அரசும், சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***