Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு தராத 'ஜப்பான் தொழில்நுட்பம்'

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு தராத 'ஜப்பான் தொழில்நுட்பம்'

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு தராத 'ஜப்பான் தொழில்நுட்பம்'

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு தராத 'ஜப்பான் தொழில்நுட்பம்'

ADDED : ஜூலை 07, 2024 03:01 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ஜப்பான் தொழில்நுட்பம் கொண்ட சிக்னல்கள் பொருத்தியும், பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.

பெங்களூரில் போக்கு வரத்து நெருக்கடி பிரச்னை, மக்களை பல ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறது.

எந்த அரசு ஆட்சிக்கு வந்தும், இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.

மாநகராட்சி, போக்குவரத்து போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்தும் பயனில்லை.

பகல் நேரத்தில் கனரக வாகனங்கள் நகரில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.

நெருக்கடிக்கு தீர்வு


பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு, தீர்வு காணும் நோக்கில், ஜப்பான் தொழில் நுட்பம் கொண்ட 'மோடரேடோ ஸ்மார்ட் சிக்னல்'கள் பொருத்த, மாநில போக்குவரத்து இயக்குனரகம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

சோதனை முறையில் நகரின் ஏழு இடங்களில், இத்தகைய சாதனங்கள் பொருத்தப்பட்டன. இந்த திட்டம் வெற்றி பெற்றால், நகர் முழுதும் பொருத்த அரசு திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்துக்கு, ஜப்பானின் சர்வதேச கூட்டுறவு வங்கியில் நிதியுதவி பெறவும் தயாரானது.

ஆனால் மூன்று சந்திப்புகளில் மட்டும், மோடரேடோ சிக்னல்கள் வெற்றி அடைந்துள்ளது. மற்ற இடங்களில் வெற்றி பெறவில்லை. எனவே திட்டம் தொடருவது சந்தேகம் என, தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, நகர சாலைப் போக்குவரத்து இயக்குனரக கமிஷனர் தீபா சோழன் கூறியதாவது:

பெங்களூரின் ஷோலே சதுக்கம், கென்சிங்டன் சாலை சந்திப்பு, இந்திரா நகரின் 80 அடி சாலை உட்பட, பல்வேறு இடங்களில், புதிய தொழில்நுட்பம் கொண்ட சிக்னல்கள் பொருத்தப்பட்டன.

இடையூறு


ஆனால் 100 அடி சாலை, ரிச்மெண்ட் சாலை, தெரசா சந்திப்பு என, மூன்று இடங்களில் மட்டும், ஜப்பான் தொழில்நுட்பம் வெற்றி அடைந்துள்ளது.

நகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தகுந்தபடி, சிக்னல்கள் அப்டேட் செய்யப்படவில்லை. இதனால் புதிய தொழில்நுட்பம் வெற்றியடைய இடையூறு உள்ளது. ஆம்புலன்ஸ் இயங்க தனி காரிடார் இல்லாததால், அவசர நேரங்களில் பயன்படுத்த முடியவில்லை.

திட்டம் வெற்றி பெற்ற, மூன்று சந்திப்புகளில் அதிநவீன தொழில்நுட்ப சிக்னல்கள் பொருத்தப்படும். ஜூலை இறுதி வரை சோதனை முறையில் இயங்கும். அதன்பின் நிரந்தரமாக பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us