ஓட்டு எண்ணிக்கையில் பிரச்னையா? தீர்த்து வைக்க காங்., குழுக்கள் தயார்!
ஓட்டு எண்ணிக்கையில் பிரச்னையா? தீர்த்து வைக்க காங்., குழுக்கள் தயார்!
ஓட்டு எண்ணிக்கையில் பிரச்னையா? தீர்த்து வைக்க காங்., குழுக்கள் தயார்!
ADDED : ஜூன் 04, 2024 05:12 AM
பெங்களூரு : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், ஏதாவது பிரச்னை எழுந்தால், அதை தீர்த்து வைப்பதற்காக, காங்கிரஸ் சார்பில், நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை சுமுகமாக நடப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஆனால், ஓட்டு எண்ணிக்கையின் போது, ஏதாவது பிரச்னை, சட்ட சிக்கல், குளறுபடி நிலவும் வாய்ப்பு உருவாகும் என்று காங்., தலைவர்கள் கருதுகின்றனர்.
ஒரு வேளை அப்படி ஏதாவது சூழ்நிலை உருவானதால், அதை தீர்த்து வைப்பதற்காக, மாநில செயல் தலைவர்கள் தலைமையில், மண்டல வாரியாக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு: மாநில செயல் தலைவர் மஞ்சுநாத் பண்டாரி, அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, கிருஷ்ணபைரேகவுடா.
மைசூரு: மாநில செயல் தலைவர் தன்வீர் செயிட், அமைச்சர்கள் தினேஷ் குண்டுராவ், எம்.சி.சுதாகர்.
பெலகாவி: மாநில செயல் தலைவர் வினய் குல்கர்னி, அமைச்சர்கள் ஹெச்.கே.பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோளி.
கலபுரகி: மாநில செயல் தலைவர் வசந்த்குமார், அமைச்சர்கள் ஈஸ்வர் கன்ட்ரே, பிரியங்க் கார்கே.