Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'இந்திய மசாலா பொருட்களுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கவில்லை'

'இந்திய மசாலா பொருட்களுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கவில்லை'

'இந்திய மசாலா பொருட்களுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கவில்லை'

'இந்திய மசாலா பொருட்களுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கவில்லை'

ADDED : ஆக 07, 2024 01:18 AM


Google News
புதுடில்லி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சில குறிப்பிட்ட மசாலா பொருட்களில், எத்திலின் ஆக்ஸைடு என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக இருந்ததாக கூறி, அவற்றுக்கு ஆசிய நாடுகளான ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் தடை செய்ததாக செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல், ராஜ்யசபாவில் நேற்று அளித்த பதில்:

மத்திய வர்த்தகத் துறையின் கீழுள்ள ஸ்பைசஸ் போர்டு எனப்படும் இந்திய மசாலா வாரியம், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உறுதி செய்கிறது.

ஏற்றுமதி செய்யப்படும் முன், மசாலா பொருட்கள் பரிசோதனைக்கு உட்பட்டு, அது அனுப்பப்படும் நாடுகளில் உள்ள தரக்கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யும்.

அதுபோல ஒவ்வொரு நாடும், தங்களுடைய நாட்டுக்குள் வரும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யும். இதன்படியே, இந்திய மசாலாப் பொருட்களை, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங், பரிசோதனைக்காக குறிப்பிட்ட சில பொருட்களை நிறுத்தி வைத்தன.

பரிசோதனைக்காக ஒரு மாதம் வரை, அவை தனியாக வைக்கப்படும். இந்திய மசாலா பொருட்களுக்கு அந்த நாடுகள் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us