ADDED : ஜூலை 04, 2024 01:29 AM
புதுடில்லி :லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பை டில்லி போலீசார் அதிகரித்துள்ளனர். வலதுசாரி ஆதரவாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, டில்லி போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
காங்., தலைவர் ராகுல் கடந்த 1ம் தேதி, லோக்சபாவில் ஹிந்துக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது.