Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் அதிகரிப்பு

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் அதிகரிப்பு

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் அதிகரிப்பு

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் அதிகரிப்பு

ADDED : ஜூன் 02, 2024 02:31 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி, லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை, 1957ல் 3 சதவீதமாக இருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் அது 10 சதவீதமாக உயர்ந்து உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. ஆனாலும், இந்தச் சட்டம், 2029ல் தான் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அறிக்கை


இந்நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 10 சதவீத பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டதாக, பி.ஆர்.எஸ்., என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கைப்படி, 2009 லோக்சபா தேர்தலில், மொத்தம் 7,810 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில், 7 சதவீதமான 556 பேர் பெண்கள். இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட 8,337 வேட்பாளர்களில், 797 பேர் பெண்கள்.

இந்த எண்ணிக்கை, மொத்த வேட்பாளர்களில் 9.6 சதவீதம். ஆறு தேசிய கட்சிகளில், தேசிய மக்கள் கட்சியில் தான், அதிகபட்சமாக 67 சதவீதம் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அ.தி.மு.க., மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில், மிகக் குறைந்த அளவாக, 3 சதவீதம் மட்டுமே பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பா.ஜ., 16 சதவீத பெண் வேட்பாளர்களை இந்த தேர்தலில் களமிறக்கியது.

காங்கிரசில் பெண் வேட்பாளர்கள், 13 சதவீதம் மட்டுமே. 20 இடங்களுக்கு மேல் போட்டியிட்ட மாநில கட்சிகளில், பிஜு ஜனதா தளம், 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. அதேபோல, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், 29 சதவீதம் பெண்களை நிறுத்தியது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஆறு பேரும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

சுயேச்சை


இதில், நான்கு பேர் சுயேச்சைகள்; இருவர் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்கள். 2014, 2019 லோக்சபா தேர்தல்களிலும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஆறு பேர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில், சிறிய மற்றும் மாநில கட்சிகளில், அதிகளவு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி அறிவித்த 40 வேட்பாளர்களில், 20 பேர் பெண்கள்.

லோக் ஜன்சக்தி ராம்விலாஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில், பெண் வேட்பாளர்கள் தலா 40 சதவீதம் இடம் பெற்றிருந்தனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us