Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அரசியல்வாதியை கட்டிப்பிடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி: போட்டோ வைரல்

அரசியல்வாதியை கட்டிப்பிடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி: போட்டோ வைரல்

அரசியல்வாதியை கட்டிப்பிடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி: போட்டோ வைரல்

அரசியல்வாதியை கட்டிப்பிடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி: போட்டோ வைரல்

ADDED : ஜூன் 23, 2024 08:42 PM


Google News
Latest Tamil News
திருவனந்தபுரம்: கேரளாவில் கம்யூ., அரசியல்வாதியை கட்டிப்பிடித்துள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியின் போட்டோவிற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவரது கணவர் இது ஒன்றும் பெரிய விசயமல்ல என்ற நேர்மறை பதில் அளித்துள்ளார்.

கேரளாவின் பினராயி விஜயன் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வென்று எம்.பியானார்.

கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருபவர் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யா எஸ் ஐயர். இவரது கணவர் சபரிநாதன். இவர் கேரள காங்கிரஸ் கட்சியி்ன் முன்னாள் எம்.எல்.ஏ.,

எம்.பி., ராதகிருஷ்ணனை கட்டிப்பிடித்த படி இருக்கும் போட்டோவை வெளியிட்ட அதிகாரி கூறி இருப்பதாவது: பத்தனம் திட்டா மாவட்டத்தில் தான் அதிகாரியாக இருந்த போது பழங்குடி இன கிராமங்களின் பிரச்னைகளை ராதாகிருஷ்ணனிடம் எடுத்து கூறிய போது அவரின் அர்ப்பணிப்பு தன்னை வியக்க வைத்தது.மேலும் ராதாகிருஷ்ணனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்ற போது அவரது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்ட போது எடுத்த படம் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியி்ன் கணவர் சபரிநாதன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில்

பல பெண் எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள், மரியாதைக்குரிய அடையாளமாக ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது தொடர்பாக கேரளாவில் இன்னும் நிலவும் சமூக வரம்புகளை எடுத்துக்காட்டும் படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

மேலும் அவர்கள் பெரிதும் போற்றும் ஒருவரைத் தழுவிக்கொண்டிருக்கும் படம், தற்போதுள்ள ஆண்-பெண் சமன்பாட்டின் பின்னணியில் சாதகமாக விவாதிக்கப்படுவதைப் பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். புகைப்படத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் பிற பொருத்தமற்ற வாதங்களை புறக்கணிக்குமாறு அவர் வலியுறுத்தினார் மற்றும் 'இனிய ஞாயிறு' வாழ்த்து தெரிவித்தார்.

பினராயி விஜயன் அமைச்சரவையில் எஸ்.சி மற்றும் எஸ்.டி நலத்துறை மற்றும் தேவஸம்துறை அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன், பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு காலனி என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தடை செய்தார். இதற்காக பல்வேறு தரப்பினர் அவரை பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us