Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கொலையான நேஹா ஜாதி சான்றிதழ் வழக்கு விசாரணையில் பெரும் குழப்பம்

கொலையான நேஹா ஜாதி சான்றிதழ் வழக்கு விசாரணையில் பெரும் குழப்பம்

கொலையான நேஹா ஜாதி சான்றிதழ் வழக்கு விசாரணையில் பெரும் குழப்பம்

கொலையான நேஹா ஜாதி சான்றிதழ் வழக்கு விசாரணையில் பெரும் குழப்பம்

ADDED : ஜூன் 01, 2024 04:42 AM


Google News
Latest Tamil News
ஹூப்பள்ளி, : ஹூப்பள்ளியில் கொலை செய்யப்பட்ட கல்லுாரி மாணவி நேஹாவின் ஜாதி சான்றிதழ், சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத். இவரது மகள் நேஹா, 22. கடந்த ஏப்ரல் 18ம் தேதி, கல்லுாரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். பயாஸ், 22, என்பவர் கைதானார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நேற்று நேஹாவின் ஜாதி சான்றிதழ் வெளியாகி உள்ளது. நேஹா லிங்காயத்தின் 'பனாஜிகா' சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அந்த ஜாதி சான்றிதழில், 'பேடம ஜங்கம' அதாவது எஸ்.சி., என்று உள்ளது.

மேலும், அந்த ஜாதி சான்றிதழில் நேஹா வசிக்கும் வீட்டின் முகவரி, பெங்களூரு ஹொங்கசந்திராவில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் நேஹா ஹூப்பள்ளியை சேர்ந்தவரா அல்லது பெங்களூரை சேர்ந்தவரா என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

நேஹாவின் கொலையை தொடர்ந்து, ஹூப்பள்ளியில் அஞ்சலி, 18, என்ற தலித் சமூக இளம்பெண், விஸ்வா, 22, என்பவரால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் நேஹாவின் தந்தை நிரஞ்சனின் ஆதரவாளர் விஜய் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் தலைமறைவாக உள்ளார்.

இந்த சூழ்நிலையில், நேஹாவின் ஜாதி சான்றிதழ் வெளியாகி, அதில் அவர் எஸ்.சி., சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us