Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ காலை 11:00 மணிக்கு திறந்த அரசு அலுவலகம்

காலை 11:00 மணிக்கு திறந்த அரசு அலுவலகம்

காலை 11:00 மணிக்கு திறந்த அரசு அலுவலகம்

காலை 11:00 மணிக்கு திறந்த அரசு அலுவலகம்

ADDED : ஜூன் 08, 2024 04:23 AM


Google News
தங்கவயல் : தங்கவயல் தாலுகா மினி விதான் சவுதா நுழைவு வாயில் சாவி இல்லாததால் திறக்கப்படவில்லை. ஊழியர்கள் பரிதவித்தனர். காலை 11:00 மணிக்கு மேல் தான் அலுவலகம் திறக்கப்பட்டது.

தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை நீதிமன்றம் அருகில், தாலுகா நிர்வாகத்துக்கு உட்பட்ட அனைத்து துறைகளின் அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்க, மினி விதான் சவுதா கட்டப்பட்டது. மினி விதான் சவுதாவில் தாலுகா அலுவலகம், உணவுத் துறை, வருவாய்த்துறை, துணை பதிவாளர் அலுவலகம், வனத்துறை, நில ஆவணங்கள் என பல துறைகளின் அலுவலகங்கள் இயங்குகின்றன.

இங்கு காலை 9:30 மணிக்கெல்லாம் அலுவலகங்கள் திறக்கப்பட்டு அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன் தினம் பணியை முடித்துக்கொண்டு வெளியே சென்ற ஊழியர்களில் ஒருவரான, கோலாரை சேர்ந்தவர், நுழைவு வாயிலின் பூட்டை பூட்டிக்கொண்டு சாவியை எடுத்துச் சென்றார்.

சாவியை எடுத்துச் சென்றவர், கோலாரில் இருந்து நேற்று காலை 10:45 மணி வரை வரவில்லை. இதனால் மினி விதான் சவுதா திறக்கப்படவில்லை. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் நுழைவு வாயில் முன் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தனர்.

அந்த நபர் வந்த பின், காலை 11:00 மணி அளவில் நுழைவு வாயில் பூட்டு திறக்கப்பட்டது. அதன் பின்னரே, 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பொதுமக்கள் அலுவலகங்களுக்குள் சென்றனர். தாமதமாக பணிகள் துவங்கின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us