ADDED : ஜூலை 12, 2024 06:47 AM

மாண்டியா; பிரசித்தி பெற்ற மேலுகோட்டே செலுவ நாராயணசுவாமி கோவிலுக்கு, பெண் டாக்டர் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை காணிக்கை செலுத்தினார்.
மாண்டியாவின் மேலுகோட்டேவைச் சேர்ந்தவர் லட்சுமம்மா, 70. டாக்டரான இவர் தற்போது, மைசூரின், குவெம்பு நகரில் வசிக்கிறார். இவர் மேலுகோட்டே செலுவ நாராயணசுவாமியின் தீவிர பக்தை. இவர் செலுவ நாராயணசுவாமி கோவிலுக்கு, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, நேற்று காணிக்கையாக செலுத்தினார். இரண்டு டிரக்குகளில் பாதுகாப்புடன் தங்க நகைகளை கொண்டு வந்த லட்சுமம்மா, இவற்றை கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.