பா.ஜ., பிரமுகருக்கு திருட்டு காரை விற்று மோசடி
பா.ஜ., பிரமுகருக்கு திருட்டு காரை விற்று மோசடி
பா.ஜ., பிரமுகருக்கு திருட்டு காரை விற்று மோசடி
ADDED : ஜூன் 29, 2024 11:02 PM
மாதநாயகனஹள்ளி: திருட்டு காரை பா.ஜ., பிரமுகருக்கு விற்று மோசடி செய்த நபரை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரின் எலஹங்கா சட்டசபை தொகுதி பா.ஜ., செயலர் ராஜேஷ்.
தொழிலதிபரான இவரை சமீபத்தில், பாலராஜ் என்பவர் தொடர்பு கொண்டார். 20 லட்சம் ரூபாய்க்கு அதிகமான விலையுள்ள 'இன்னோவா' காரை, குறைந்த விலைக்கு விற்பதாக நம்ப வைத்தார்.
ராஜேஷும் சம்மதித்தார். 15.60 லட்சம் ரூபாய் கொடுத்து காரை வாங்கினார். 5.60 லட்சம் ரூபாயை ரொக்கமாகவும், 10 லட்சம் ரூபாய் காசோலையும் கொடுத்திருந்தார். காரின் ஒரிஜினல் ஆவணங்களை கேட்டபோது, பால்ராஜ் பொய்யான ஆவணங்களை உருவாக்கிக் கொடுத்திருந்தார்.
இதே பதிவு எண்ணில், மங்களூரின் மாலதி என்பவரின் கார் திருட்டு போனது. இது குறித்து விசாரித்தபோது, இந்த கார் பெங்களூரின் தொழிலதிபர் ராஜேஷிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி அவருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போதுதான் அது திருட்டு கார் என்பது, அவருக்கு தெரிந்தது.
இதுகுறித்து, மாதநாயகனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் பால்ராஜ், இவரது கூட்டாளிகள் பிரபாகர், ஷபி, புட்டா ஆகியோர் மீது, வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களை தேடுகின்றனர்.