தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்
ADDED : ஜூன் 13, 2024 04:04 PM

புதுடில்லி: தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் ராணுவத்துறையை நவீனமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்று(ஜூன் 13) பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற பிறகு ராஜ்நாத் சிங் கூறியதாவது: புதிய தே.ஜ., கூட்டணி அரசு பாதுகாப்பு உபகரணங்களின், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் ராணுவத்துறையை நவீனமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்
ரூ.50ஆயிரம் கோடி
2028- 2029ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை, தற்போதைய ரூ.21,083 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக உயர்த்த அரசு முனைப்புடன் செயல்படும். அதிநவீன ஆயுதங்கள் தங்களிடம் உள்ளன. பாதுகாப்பு படை வீரர்கள் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.