ADDED : ஜூன் 06, 2025 09:21 PM
புதுடில்லி,:தலைநகர் டில்லியில், ஐ.டி.ஓ., வருவாய்த் துறை அலுவலகம் மற்றும் கோண்டா மின்சார ரிக்ஷா தொழிற்சாலை ஆகிய இடங்களில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இரு இடங்களிலுமே யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
டில்லி ஐ.டி.ஓ., வருவாய்த் துறை கட்டடத்தின், இரண்டாவது மாடியில் அறை எண் 238ல் நேற்று காலை 10:00 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து, ஏழு வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். இருபது நிமிடங்களி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஏர் கண்டிஷனிங் கேபிள்கள் செயலிழந்ததால் தீப்பற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் சேதமடைந்தன.
அதேபோல, கோண்டாவில் உள்ள மின்சார ரிக்ஷா சார்ஜிங் நிலையத்தில் நேற்று மதியம், 2:50 மணிக்கு தீப்பற்றியது. நான்கு வண்டிகளில் அந்த தீயணைப்புப் படை வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்திலும் யாருக்கும் பாதிப்பு இல்லை. உபகரணங்கள் சில மின்சார ரிக்ஷாக்கள் சேதம் அடைந்தன.