ADDED : ஜூலை 13, 2024 01:02 AM
புதுடில்லி:பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பாவானா தொழிற்பேட்டையில் இரண்டு மாடி கொண்ட பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று காலை 10:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து ஆறு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அரை மணி நேரத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால், ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசம் அடைந்தன.