தர்ஷனை பார்க்க முடியாமல் சிறை அருகே ரசிகர்கள் கண்ணீர்
தர்ஷனை பார்க்க முடியாமல் சிறை அருகே ரசிகர்கள் கண்ணீர்
தர்ஷனை பார்க்க முடியாமல் சிறை அருகே ரசிகர்கள் கண்ணீர்
ADDED : ஜூன் 24, 2024 04:56 AM
பெங்களூரு : நடிகர் தர்ஷனை பார்க்க முடியாமல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை முன்பு, அவரது ரசிகர்கள் கண்ணீர் விட்டனர்.
கன்னட நடிகர் தர்ஷன், 47. தனக்கென பெரிய ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார். சித்ரதுர்கா ரசிகரான ரேணுகா சாமியை கொலை செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தர்ஷன் சிறைக்கு சென்றாலும், ரசிகர்கள் அவரை பார்க்க காத்திருக்கின்றனர். தர்ஷன் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராய்ச்சூரின் லிங்கசுகுர் பகுதியை சேர்ந்த தர்ஷனின் ரசிகர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷனை பார்க்க நேற்று வந்தனர். ஆனால் விடுமுறை நாள் என்பதால், தர்ஷனை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள், அங்கேயே கண்ணீர் விட்டனர். 'தர்ஷன் தவறு செய்திருக்கலாம்; ஆனால், 'அவர் நல்ல மனிதர். பல சமூக சேவைகளை செய்துள்ளார். இன்று இரவு காத்திருந்து, நாளை காலை தர்ஷனை பார்த்துவிட்டு தான் செல்வோம்' என்று ரசிகர்கள் கூறினர்.
இன்ஸ்டாகிராம்
பவித்ராவுக்கு, ரேணுகாசாமி இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியதுடன், மர்ம உறுப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியதால் தான் கொலை சம்பவம் நடந்தது விசாரணையில் தெரிந்தது.
பவித்ராவுக்கு, ரேணுகாசாமி அனுப்பிய ஆபாச குறுந்தகவல்; ரேணுகாசாமிக்கு, பவித்ரா அனுப்பிய பதில் குறுந்தகவல் ஆகியவை பற்றி அறிய, இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு, கடிதம் எழுத போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பவித்ராவின் மொபைல் போனை பறிமுதல் செய்து, போலீசார் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரேணுகாசாமியின் மொபைல் கால்வாயில் வீசப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.