'மாஜி' மத்திய அமைச்சர் வீட்டில் தீ 'ஜிம்' உபகரணங்கள் எரிந்து நாசம்
'மாஜி' மத்திய அமைச்சர் வீட்டில் தீ 'ஜிம்' உபகரணங்கள் எரிந்து நாசம்
'மாஜி' மத்திய அமைச்சர் வீட்டில் தீ 'ஜிம்' உபகரணங்கள் எரிந்து நாசம்
ADDED : ஜூன் 26, 2024 08:52 AM

உத்தர கன்னடா : முன்னாள் மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் எரிந்து நாசமாயின.
உத்தரகன்னடா பா.ஜ., -- எம்.பி.,யாக ஆறு முறை வெற்றி பெற்றவர் அனந்தகுமார் ஹெக்டே, 56. இவர் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இவரது வீடு, சிர்ஷியின் கே.எச்.பி., காலனியில் அமைந்துள்ளது. நேற்று காலை வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில், புகை தென்பட்டது. சற்று நேரத்தில் தீப்பற்றி எரிந்தது.
உடனே அங்கிருந்தோர் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீ மளமளவென பரவியது. அதற்குள் தகவலறிந்த தீயணைப்பு ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். அரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், லட்சக்கணக்கான மதிப்புள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் எரிந்து சாம்பலானது. சில உபகரணங்கள் முழுதும் சேதமடைந்தது.
சம்பவம் நடந்த வேளையில், அனந்தகுமார் ஹெக்டேவும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லை.
பாதுகாப்பு ஊழியர் தான் கவனித்து, பெரிய அசம்பாவிதத்தை தடுத்துள்ளார். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.