ஓட்டு இயந்திரம் மீது குறை கூறுவர் காங்., குறித்து ஈஸ்வரப்பா கிண்டல்
ஓட்டு இயந்திரம் மீது குறை கூறுவர் காங்., குறித்து ஈஸ்வரப்பா கிண்டல்
ஓட்டு இயந்திரம் மீது குறை கூறுவர் காங்., குறித்து ஈஸ்வரப்பா கிண்டல்
ADDED : ஜூன் 04, 2024 04:12 AM

ஷிவமொகா : “தேர்தல் முடிவு வெளியான பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது என காங்கிரசார் குற்றம் சாட்டுவர்,” என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
நம் மக்களின் மனதில் இடம் பிடித்த நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் பதவியில் அமர்வார் என்பதில், சந்தேகமே இல்லை. தேர்தல் கருத்துக் கணிப்புகள் மூலமாக, மக்களின் முடிவு வெளியாகியுள்ளது.
காங்கிரசார் நாளை (இன்று) மதியம் வரை, 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வருமென, கூறுவர். முடிவு வெளியான பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது.
நரேந்திர மோடி எதிர்பாராமல் பிரதமரானார் என, குற்றம் சாட்டுவர். லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், கர்நாடகாவில் அரசியல் சூழ்நிலை மாறும்.
ஷிவமொகா லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், போலியான வீடியோக்கள் வெளியிட்டு, எனக்கு எதிராக சதி செய்தனர்.
இதுதொடர்பாக, தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளேன். என் புகார் மத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டதாக பதில் கிடைத்துள்ளது. மத்திய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்ற கதவை தட்டுவேன்.
நாட்டில் இம்முறை பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஆட்சிக்கு வரும். இதற்கு ஆய்வு அவசியம் இல்லை. கர்நாடக காங்கிரஸ் அரசின் வாக்குறுதித் திட்டங்களை, மக்கள் ஆதரிக்கவில்லை. நாட்டின் எதிர்காலத்தை கவனிக்கின்றனர்.
ஷிவமொகாவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போலீஸ் துறை மக்களுக்காக பணியாற்றவில்லை. சமீபத்திய சம்பவங்கள் இதை உறுதிபடுத்துகின்றன. ஹிந்துக்கள் தங்களின் மகள்களை, தாங்களே பாதுகாக்க வேண்டும். அரசால் பாதுகாக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.