தசரா யானைகள் ஆந்திரா அனுப்பப்படாது அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே திட்டவட்டம்
தசரா யானைகள் ஆந்திரா அனுப்பப்படாது அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே திட்டவட்டம்
தசரா யானைகள் ஆந்திரா அனுப்பப்படாது அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே திட்டவட்டம்
ADDED : ஜூன் 16, 2024 07:42 AM

மைசூரு: ''கர்நாடகாவின் தசரா யானைகளை அனுப்பும்படி, ஆந்திரா கேட்டுள்ளது. எந்த காரணத்தை கொண்டும், தசரா யானைகள் அனுப்பப்படாது,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
மைசூரின், சாமராஜேந்திர மிருகக்காட்சி சாலைக்கு, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, நேற்று வந்திருந்தார். பின் அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவின் தசரா யானைகளை வழங்கும்படி, ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், எந்த காரணத்தை கொண்டும், தசரா யானைகள் ஆந்திராவுக்கு அனுப்பப்படாது.
தசரா யானைகள், நம் மாநிலத்தின் பெருமைக்குரிய அடையாளம். தசரா யானைகளை தவிர, மற்ற யானைகளை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்படும்.
மின்சாரம் பாய்ந்து, யானைகள் இறப்பது வருத்தம் அளிக்கிறது. யானைகள் இறந்தது குறித்து, அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது.
எங்கள் துறையில், துாதர்கள் யாரும் இல்லை. சாமுண்டி மலையில் 'ரோப் வே' அமைப்பது குறித்து, யாரும் பயப்பட தேவையில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், வளர்ச்சிப் பணிகளை நடத்த வேண்டும்.
சாமராஜேந்திர மிருகக்காட்சி சாலையில், சுற்றுலா பயணியர் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதை தவிர்க்கும் நோக்கில், வாட்ஸாப், ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதி செய்யப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.