காங்., - எம்.பி.,க்கள் தகுதி நீக்கம்; தோற்றவர்கள் ஐகோர்ட்டில் மனு
காங்., - எம்.பி.,க்கள் தகுதி நீக்கம்; தோற்றவர்கள் ஐகோர்ட்டில் மனு
காங்., - எம்.பி.,க்கள் தகுதி நீக்கம்; தோற்றவர்கள் ஐகோர்ட்டில் மனு
ADDED : ஜூலை 19, 2024 05:41 AM
பெங்களூரு : கர்நாடக காங்கிரசின் இரண்டு எம்.பி.,க்களை, தகுதி நீக்கம் செய்ய கோரி, தோற்ற வேட்பாளர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில், தாவணகெரே தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக பிரபா மல்லிகார்ஜுன், பா.ஜ., சார்பில் காயத்ரி சித்தேஸ்வர் போட்டியிட்டனர். இதில் பிரபா வெற்றி பெற்றார். இவர் தேர்தலுக்கு முன், பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் 'கியாரண்டி கார்டு' வழங்கியதாக கூறப்பட்டது. இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும் என பா.ஜ.,வின் தோற்ற வேட்பாளர் காயத்ரி சித்தேஸ்வர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
'காங்கிரசின் பிரபா, வாக்காளர்களுக்கு லஞ்ச ஆசை காண்பித்து, வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் சட்டவிரோதமாக வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்' என, கோரியுள்ளார்.
இதேபோன்று ஹாசன் லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷ்ரேயஸ் படேல், 'தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனு முறைப்படி இல்லை. வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் செலவுகள் தொடர்பாகவும், பொய்யான தகவல் தெரிவித்துள்ளார். எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என தோற்ற பா.ஜ., வேட்பாளர் தேவராஜே கவுடாவின் மகன் சரண், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.