80% குறைந்த விலையில் நீரிழிவு மாத்திரை அறிமுகம்
80% குறைந்த விலையில் நீரிழிவு மாத்திரை அறிமுகம்
80% குறைந்த விலையில் நீரிழிவு மாத்திரை அறிமுகம்
ADDED : மார் 13, 2025 01:29 AM
மும்பை : சர்க்கரை நோயாளிகளுக்கு 80 சதவீதம் குறைந்த விலையில், புதிய மாத்திரையை மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த 'அல்கெம்' நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது.
நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டப்படுத்த, தற்போது மெட்பார்மின், லினாக்லிபிடின் உள்ளிட்ட மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த அல்கெம் என்ற நிறுவனம், டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்காக, குறைந்த விலை மாத்திரையை, 'எம்பனார்ம்' என்ற பெயரில் நேற்று அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விகாஷ் குப்தா கூறுகையில், “டைப் 2 நீரிழிவு, நாள்பட்ட சிறுநீரக நோய், இதய க்கோளாறை ஏற்படுத்தும். அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருந்து இருக்கும். நோயாளிகளின் வசதிக்காக சிறிய மாத்திரை வடிவில் கிடைக்கும்.
“இந்திய சந்தையில், 'எம்பாக்ளிப்ளோசின்' வகை மருந்தில் இது ஒரு முக்கியமான மைல்கல். இது 80 சதவீதம் வரை, விலை குறைவாக இருக்கும்,” என்றார்.