Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பணவீக்கம் குறைவதில் தாமதம்: சக்திகாந்த தாஸ் விளக்கம்

பணவீக்கம் குறைவதில் தாமதம்: சக்திகாந்த தாஸ் விளக்கம்

பணவீக்கம் குறைவதில் தாமதம்: சக்திகாந்த தாஸ் விளக்கம்

பணவீக்கம் குறைவதில் தாமதம்: சக்திகாந்த தாஸ் விளக்கம்

UPDATED : ஜூன் 22, 2024 04:19 AMADDED : ஜூன் 22, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
மும்பை: உணவு பொருட்கள் விலை அழுத்தங்கள், பணவீக்கம் மேலும் குறைவதை தாமதப்படுத்துவதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்த தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டது.

அக்கூட்டத்தில் சக்திகாந்த தாஸ் தெரிவித்ததாவது: சில்லரை விலை பணவீக்கம் மிகக் குறைந்த வேகத்தில் குறைந்து வருகிறது. உணவு விலை அழுத்தங்களே இதற்கு முக்கிய காரணம். அடிக்கடி ஏற்படும் வினியோக தொடர் சிக்கல்களே, உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனினும், பருவமழை இயல்பாக இருக்கும்பட்சத்தில், உணவுப் பொருட்களின் விலை குறையக்கூடும். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டுக்கான பணவீக்கம் குறைந்திருக்கும் என்றாலும், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் மீண்டும் அதிகரித்து காணப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தொடர்ந்து எட்டாவது முறையாக, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி, 6.50 சதவீதமாகவே வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us