50 தாலுகா மருத்துவமனைகளில் ரத்த சேகரிப்பு மையம் திறக்க முடிவு
50 தாலுகா மருத்துவமனைகளில் ரத்த சேகரிப்பு மையம் திறக்க முடிவு
50 தாலுகா மருத்துவமனைகளில் ரத்த சேகரிப்பு மையம் திறக்க முடிவு
ADDED : ஜூன் 28, 2024 11:08 PM
பெங்களூரு: ரத்தம் கிடைக்காமல், நோயாளிகள் இறப்பதைத் தவிர்க்கும் நோக்கில், கர்நாடகாவின் 50 தாலுகா மருத்துவமனைகளில், ரத்த சேகரிப்பு மையம் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு பின், மருத்துவமனைகள், ரத்த சேகரிப்பு வங்கிகளில், ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான நேரத்தில் ரத்தம் கிடைக்காமல், மருத்துவமனைகள் திண்டாடுகின்றன.
இதற்கு முன்பு ஆங்காங்கே, ரத்த தான முகாம்கள் நடக்கும். சமீப காலமாக, முகாம்கள் நடப்பது குறைந்துள்ளது. சில மருத்துவமனைகளில் ரத்த சேகரிப்பு வங்கிகள் இல்லை. இதை உணர்ந்துள்ள, மாநில அரசு 50 தாலுகா மருத்துவமனைகளில், ரத்த சேகரிப்பு மையம் திறக்க முடிவு செய்துஉள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தின் அரசு மருத்துவமனைகளில், ரத்த பற்றாக்குறை உள்ளது. சரியான நேரத்தில் ரத்தம் கிடைக்காமல், நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்துஉள்ளது.
மாநிலத்தின் 21 மாவட்டங்களின், 50 தாலுகா மற்றும் சமுதாய மருத்துவமனைகளில் ரத்த சேகரிப்பு மையம் திறக்கப்படும்.
பெலகாவியில் எட்டு; பெங்களூரு நகர், கொப்பாலில் தலா ஐந்து; தட்சிண கன்னடாவில் மூன்று; உத்தரகன்னடா, பெங்களூரு ரூரல், ஹாவேரி, ஹாசன்.
கலபுரகி, பல்லாரி, விஜயபுரா, உடுப்பி, ராம்நகர், மைசூரு, மாண்டியா மாவட்டத்தில் தலா இரண்டு; தாவணகெரே, பீதர், சிக்கமகளூரு, பாகல்கோட், யாத்கிர், கோலார், சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தலா ஒரு புதிய ரத்த சேகரிப்பு மையம் திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.