95 முறை குத்தி மாமியார் கொலை மருமகளுக்கு மரண தண்டனை
95 முறை குத்தி மாமியார் கொலை மருமகளுக்கு மரண தண்டனை
95 முறை குத்தி மாமியார் கொலை மருமகளுக்கு மரண தண்டனை
ADDED : ஜூன் 13, 2024 12:57 AM
ரேவா, மத்திய பிரதேசத்தில் குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் 95 முறை குத்தி கொலை செய்த இளம்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து மத்திய பிரதேச கூடுதல் செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் மங்கவா அருகேயுள்ள அட்ரைலா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கஞ்சன் கோல், 24, இவருக்கும் இவரது மாமியார் சரோஜ் கோல், 50, இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 12ல் மீண்டும் மாமியார் - மருமகள் இடையே தகராறு முற்றியது.
அப்போது மாமனார் வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கஞ்சன் கோல் அரிவாளை எடுத்து மாமியார் சரோஜ் கோலை 95 முறை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த சரோஜ் கோலை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரோஜ் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
கஞ்சன் கோல் கைதானார். வழக்கை விசாரித்த ரேவா நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பத்மா ஜாதவ், கஞ்சன் கோலை குற்றவாளியாக அறிவித்தார். கொலை குற்றத்திற்காக கஞ்சன் கோலுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் கொலைக்கு உறுதுணையாக இருந்த சரோஜ் கோலின் கணவர் வால்மீகியையும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது. அவரது குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால் வால்மீகி கோல் விடுதலை செய்யப்பட்டார்.