'பா.ஜ., ஆட்சியில் 'மூடா' முறைகேடு'
'பா.ஜ., ஆட்சியில் 'மூடா' முறைகேடு'
'பா.ஜ., ஆட்சியில் 'மூடா' முறைகேடு'
ADDED : ஜூலை 07, 2024 03:08 AM

மாண்டியா: ''பா.ஜ., ஆட்சியில் தான், மூடாவில் முறைகேடு நடந்தது. இதை மறைக்க முதல்வர் சித்தராமையா பெயரை தேவையின்றி இழுக்கின்றனர்,'' என, அமைச்சர் செலுவராயசாமி கூறி உள்ளார்.
விவசாய அமைச்சர் செலுவராயசாமி நேற்று மாண்டியாவில் அளித்த பேட்டி:
குமாரசாமி, தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். நாடு, மாநில வளர்ச்சியில் அவர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதை விட்டுவிட்டு சில்லரை அரசியல் செய்யக் கூடாது. அரசின் மக்கள் குறைகேட்பு, கூட்டங்களால் எந்த பயனும் இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.
மாண்டியாவில் குமாரசாமி நடத்திய கூட்டத்திற்கு லாரிகள், டிராக்டர்களில் ஆட்கள் அழைத்து வரப்பட்டனரா என தெரியவில்லை.
மத்திய அமைச்சர்கள் நடத்தும் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளக் கூடாது என, குமாரசாமி முதல்வராக இருந்தபோது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை தான், நாங்கள் கடைபிடித்து வருகிறோம்.
குமாரசாமி முதல்வராக இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசினார்.
ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை ஆகியோரை தவிர்த்து, பிரதமர் நரேந்திர மோடி, குமாரசாமியை மத்திய அமைச்சர் ஆக்கியுள்ளார். பிரதமர் மோடிக்கு, குமாரசாமி மீது அதிக நம்பிக்கை உள்ளது.
இதனால் பிரதமரிடம் பேசி மாண்டியா மாவட்ட வளர்ச்சிக்கு அதிக நிதி வாங்கி வர வேண்டும். நீர்ப்பாசன திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாய் நிதி கேட்க வேண்டும்.
மாண்டியாவில் தொழிற்சாலைகள் அமைத்து, வேலையில்லா திண்டாட்டத்தை நீக்க வேண்டும். குமாரசாமி சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு ஆதரவு அளிக்க, நாங்களும் தயாராக உள்ளோம்.
பா.ஜ., ஆட்சியில் தான், மூடாவில் முறைகேடு நடந்தது. இதை மறைக்க முதல்வர் சித்தராமையா பெயரை தேவையின்றி இழுக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.