சட்டத்தின் ஆட்சியை உணர்த்தும் நீதிமன்றங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்
சட்டத்தின் ஆட்சியை உணர்த்தும் நீதிமன்றங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்
சட்டத்தின் ஆட்சியை உணர்த்தும் நீதிமன்றங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்
ADDED : ஜூலை 02, 2024 11:57 AM

புதுடில்லி: நீதிமன்றங்கள் நீதியின் மீதான நம்பிக்கையையும், சட்டத்தின் ஆட்சியையும் உணர்த்துகின்றன என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
டில்லி சாஸ்தி பார்க் பகுதியில் புதிய நீதிமன்ற கட்டடங்கள் கட்ட, சந்திரசூட் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் கூறியதாவது: நீதியை தேடி நீதிமன்றங்களுக்கு மக்கள் வர வேண்டும். இன்று அடிக்கல் நாட்டிய நீதிமன்ற கட்டடங்கள் உரிய நேரத்தில் கட்டி முடிக்கப்படும். அனைத்து வழக்கறிஞர்களும் தேவையான வசதிகளை பெறுவார்கள்.
நாங்கள் அவர்களின் நலன்களுக்கு சேவை செய்ய வேண்டும். அரசியலைப்பு சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன், அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கவனமாக ஆலோசித்து, தீர்ப்பு வழங்குகிறார்கள். நீதிமன்றங்கள் நீதியின் மீதான நம்பிக்கையையும், சட்டத்தின் ஆட்சியையும் உணர்த்துகின்றன. இவ்வாறு சந்திரசூட் கூறினார்.