காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்: மத்திய அமைச்சர்
காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்: மத்திய அமைச்சர்
காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்: மத்திய அமைச்சர்
ADDED : ஜூலை 14, 2024 12:09 PM

ஜெய்ப்பூர்: 'அரசியலமைப்பு சட்டத்தை கொலை செய்தது காங்கிரஸ் தான். அக்கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்' என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
இது குறித்து, நிருபர்களிடம் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது: அரசியலமைப்பு சட்டத்தை கொலை செய்தது காங்கிரஸ் தான். 1975ம் ஆண்டு எமர்ஜென்சியை அமல்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் நசுக்கியது. தற்போது அவர்கள் இன்று அரசியலமைப்பு சட்டம் புத்தகத்தை கையில் பிடித்துக்கொண்டு, காப்பாற்றுங்கள் என்று கோஷம் போடுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தனது பொய்களை, 100 முறை சொல்லி உண்மையென நிரூபிக்க முயல்கிறது. ஆனால் நாட்டு மக்களால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.