காங்., - எம்.எல்.ஏ.,க்கள் நாளை ஆலோசனை கூட்டம்
காங்., - எம்.எல்.ஏ.,க்கள் நாளை ஆலோசனை கூட்டம்
காங்., - எம்.எல்.ஏ.,க்கள் நாளை ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 01, 2024 06:36 AM
பெங்களூரு: மேலவையில் 11 இடங்களுக்கான நடக்க உள்ள தேர்தல் தொடர்பாக, நாளை காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்துக்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக மேலவையில் பா.ஜ.,வின் ஆறு, காங்கிரசின் நான்கு, ம.ஜ.த.,வின் ஒன்று என 11 உறுப்பினர்களின் பதவி காலம், வரும் 17ம் தேதி நிறைவடைகிறது.
இப்பதவிகளுக்கான தேர்தல், ஜூன் 13ம் தேதி நடக்கிறது. 136 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட காங்கிரசில், ஏழு பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த ஏழு இடங்களுக்கு 40க்கும் மேற்பட்டோர் சீட் கேட்டுள்ளனர்.
வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக, மே 29ல், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் டில்லி சென்று, ஆலோசனை நடத்தி விட்டு வந்தனர்.
அதேவேளையில், ஜூன் 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே, ஜூன் 2ம் தேதி வரை வேட்பாளர்கள் விபரம் குறித்து தெரிவிக்க வேண்டாம் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மேலவை தேர்தல் தொடர்பாக, நாாளை அரண்மனை சாலையில் உள்ள சி.ஓ.டி., அலுவலகம் எதிரில் உள்ள ஹோட்டல் ஏட்ரியாவில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் கட்சி மேலிடம் பிறப்பித்த உத்தரவு குறித்தும், குறுக்கு ஓட்டு போன்ற முயற்சிகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.