காங்., --- எம்.எல்.ஏ., சிவகங்காவுக்கு தாவணகெரே குருபர் சமூகம் எதிர்ப்பு
காங்., --- எம்.எல்.ஏ., சிவகங்காவுக்கு தாவணகெரே குருபர் சமூகம் எதிர்ப்பு
காங்., --- எம்.எல்.ஏ., சிவகங்காவுக்கு தாவணகெரே குருபர் சமூகம் எதிர்ப்பு
ADDED : ஜூன் 29, 2024 11:23 PM

தாவணகெரே: சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று கூறிய, சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்காவுக்கு, தாவணகெரே குருபர் சமூகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தாவணகெரே சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா. முதல் முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற இவர், முதல்வர் சித்தராமையாவை அவ்வபோது விமர்சனம் செய்து பேசி வருகிறார். துணை முதல்வர் சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று, சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு, தாவணகெரே மாவட்ட குருபர் சமூகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அந்த சமூகத்தின் மாவட்ட தலைவர் மோகன் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக, சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா தேவை இன்றி கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
சென்னகிரியில் அவர் வெற்றி பெற குருபர் சமூக ஓட்டுகளும் காரணம் என்பதை அவர் மறக்க வேண்டாம். அவருக்கு தைரியம் இருந்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலை சந்தித்து வெற்றி பெறட்டும்.
காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,க்களே, முதல்வருக்கு எதிராக பேசுவதில்லை. முதல் முறை எம்.எல்.ஏ., ஆகிவிட்டு, பசவராஜ் சிவகங்கா தேவையின்றி பேசுவது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் சித்தராமையா குருபர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.