வணிக வரி அதிகாரிகள்: முதல்வர் எச்சரிக்கை
வணிக வரி அதிகாரிகள்: முதல்வர் எச்சரிக்கை
வணிக வரி அதிகாரிகள்: முதல்வர் எச்சரிக்கை
ADDED : ஜூன் 11, 2024 10:43 PM

பெங்களூரு : ''குறிப்பிட்ட காலத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட வணிக வரியை வசூலிக்கா விட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இலக்கை அடையவில்லை என்றால் இடமாற்றம் கிடையாது,'' என அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை விடுத்தார்.
பெங்களூரு விதான் சவுதாவின் மாநாட்டு அரங்கில் நேற்று, வணிக வரி துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
வணிக வரி மூலம் குறிப்பிட்ட இலக்கை வசூலித்தால் மட்டுமே, உங்களின் பணி இடமாற்றத்தில் இதை சாதனையாக கருத முடியும். வேறு எந்த சிபாரிசையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இலக்கை அடையவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகாரிகளிடம் வரும் புகார்களை மூன்று மாதங்களில் முடித்துவிட வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை பாயும். செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் முன்னேற்ற ஆய்வு கூட்டம் நடக்கும். அதற்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வணிக வரித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆய்வு கூட்டம் நடத்தினார். இடம்: விதான் சவுதா, பெங்களூரு.