Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஒருங்கிணைந்த நகரங்கள் பணிகள் மும்முரம்

ஒருங்கிணைந்த நகரங்கள் பணிகள் மும்முரம்

ஒருங்கிணைந்த நகரங்கள் பணிகள் மும்முரம்

ஒருங்கிணைந்த நகரங்கள் பணிகள் மும்முரம்

ADDED : ஜூன் 26, 2024 08:52 AM


Google News
பெங்களூரு : தங்கவயல் உட்பட எட்டு நகரங்களின் அருகே ஒருங்கிணைந்த நகரங்கள் உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது.

கர்நாடக சட்டசபையில், 2024 - 24ம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை, நிதித்துறையை நிர்வகிக்கும், முதல்வர் சித்தராமையா, கடந்த பிப்ரவரி 16ம் தேதி தாக்கல் செய்தார். அதில், தங்கவயல், மைசூரு, மங்களூரு, ஹுப்பள்ளி - தார்வாட், பெலகாவி, கலபுரகி, துமகூரின் வசந்தநரசிபுரா, பல்லாரி ஆகிய நகரங்களில் அருகே, ஒருங்கிணைந்த நகரங்கள் உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு, கர்நாடகா நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதி நிறுவனத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, ஒருங்கிணைந்த நகரங்கள் உருவாக்குவதற்கான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் கமிஷனர் மற்றும் நகர, கிராமிய திட்ட ஆணையரகத்திடம் ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us